News December 29, 2025
வேலூர்: கருணை அடிப்படையில் 14 நபருக்கு அரசு வேலை

வேலூர் மாவட்டத்தில் அரசு துறைகளில் பணிபுரிந்து பணியிடைமரணம் அடைந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணையை 14 நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, இன்று (டிசம்பர் 29) ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார். இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
Similar News
News January 16, 2026
வேலூர் மத்திய சிறைவாசிகளுக்கு சிறப்பு உணவு

வேலுார் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறையில் பொங்கல் பண்டிகையின் போது, சிறைத் துறை சார்பில் சிறப்பு உணவு வகைகள் வழங்கப்படும். அதன்படி, நேற்று சிறைவாசிகளுக்கு சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், வெஜிடபிள் பிரியாணி, வடை ஆகிய சிறப்பு உணவு வகைகள் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது என சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
News January 16, 2026
வேலூர்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

வேலூரில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே ADVANCE தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!
News January 16, 2026
வேலூர்: ‘HI’ போதும் வங்கி விபரங்கள் Whatsapp-இல்!

வேலூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2) Canara Bank – 90760 30001, 3) Indian Bank – 87544 24242 4) IOB – 96777 11234, 5) HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.


