News December 29, 2025
நாகை: ஆட்சியர் தலைமையில் குறைதீர் கூட்டம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 261 மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி உடனிருந்தார்.
Similar News
News January 13, 2026
நாகை விளையாட்டு வீரர்கள் கவனத்திற்கு

இளைய தலைமுறையினரின் உடற்கல்வி மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகள் நாகை மாவட்டத்தில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் 16 – 35 வயதுடைய, நாகை மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் www.sdat.tn.gov.in அல்லது www.cmyouthfestival.sdat.in வாயிலாக வரும் ஜன.21-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News January 13, 2026
நாகை: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

நாகை மாவட்டத்தில் திருவள்ளுவர் தினம் (ஜன.16) மற்றும் குடியரசு தினம் (ஜன.26) ஆகிய இரண்டு நாட்களிலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள் மற்றும் கூடங்களை மூட வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். இதனை மீறி அன்றைய தினம் யாராவது மதுபான விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
News January 13, 2026
நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

தமிழக அரசின் நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்துடன் (TANFINET) இணைந்து நாகை மாவட்ட கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள் https://tanfinet.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.


