News December 29, 2025
திருச்சி: பிரச்சனைகளை தீர்க்கும் நல்லாண்டவர்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பிரசித்தி பெற்ற நல்லாண்டவர் கோவில் அமைந்துள்ளது. குடும்பத்தில் ஏற்படும் தகராறு, விஷ ஜந்துக்களால் ஏற்படும் தொந்தரவு, மன ரீதியாக ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இங்குள்ள நல்லாண்டவரிடம் முறையிட்டால், அவர் அண்ணனாக இருந்து பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பார் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த தகவலை மறக்கமால் SHARE செய்க.
Similar News
News January 10, 2026
திருச்சி: பூக்கள் விலை கடும் உயர்வு

கடும் பனிப்பொழிவு காரணமாக திருச்சி மாவட்டத்திற்கு பூக்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பூக்கள் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது. இன்று (ஜன.10) காலை நிலவரப்படி காந்தி மார்க்கெட்டில் ரூ.1000 வரை விற்கப்பட்டு வந்த மல்லிகைப்பூ மதியம் ரூ.3500 – ரூ.4000 வரை விற்பனை ஆகிறது. முல்லை ரூ.1500, கனகாம்பரம் ரூ.800, ஜாதிப்பூ ரூ.800, காக்கரட்டான், ரூ.800 ஆகிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
News January 10, 2026
திருச்சி: பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000.. APPLY

திருச்சி மக்களே.. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதி, தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களை அறிய திருச்சி மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். SHARE பண்ணுங்க.
News January 10, 2026
திருச்சி: வாட்ஸ்அப் வழியாக புக்கிங்!

திருச்சி மக்களே, இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!


