News December 29, 2025
கடத்தல்காரர்களின் சிம்ம சொப்பனம் இந்த பெண் சிங்கம்!

டெல்லி போலீஸ் கான்ஸ்டபிள் சீமா தாகா, கடந்த 3 மாதங்களில் காணாமல் போன 76 குழந்தைகளை மீட்டு அதிரடி காட்டியுள்ளார். இந்த ஆபரேஷனில் பல கடத்தல்காரர்கள், கொலைகாரர்களை தீரத்துடன் எதிர்கொண்டு வாகை சூடியுள்ளார். காணாமல் போன குழந்தைகளில் பெரும்பாலனவர்கள் கட்டிட தொழில் செய்யும் கூலி தொழிலாளர்களின் பிள்ளைகள். இந்த பெண் சிங்கத்தின் தீரத்தை பாராட்டி கான்ஸ்டபிளில் இருந்து ASI-ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News January 12, 2026
டெல்லியில் விஜய்.. என்ன நடக்கிறது!

டெல்லியில் தவெக தலைவர் விஜய்யிடம், CBI அதிகாரிகள் கரூரில் மரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை காலை 11 மணியளவில் தொடங்கி நடைபெறுவதாக கூறப்படுகிறது. அதே போல, ‘ஜனநாயகன்’ பட விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விசாரணை தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் வெளிவந்துள்ளது. இதனால், தவெக தொண்டர்களின் கவனம் டெல்லி பக்கம் திரும்பியுள்ளது.
News January 12, 2026
4 நாள்கள் பொங்கல் விடுமுறை!

பொதுவாக ஜனவரியில் பள்ளிகளை போலவே வங்கிகளுக்கும் பல நாள்கள் விடுமுறை உள்ளது. இதில் எத்தனை நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதில் சிலருக்கு குழப்பம் நிலவுகிறது. அந்த வகையில் ஜன.15, 16, 17 ஆகிய நாள்களை அடுத்து 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே வங்கியில் முக்கிய வேலையை முடிக்க செல்பவர்கள், மேற்கூறிய விடுமுறைகளை மனதில் வைத்து உங்கள் வேலைகளை திட்டமிடுவது நல்லது.
News January 12, 2026
காங்., துரோகத்தை ‘பராசக்தி’ காட்டியுள்ளது: அண்ணாமலை

‘பராசக்தி’ அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை ஏர்போர்ட்டில் பேட்டியளித்த அவர், காங்கிரஸை பற்றி தெரிந்துகொள்ள இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். காங்., கட்சி செய்த துரோகத்தை ‘பராசக்தி’ படம் காட்டியுள்ளதாகவும், இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘ஜனநாயகன்’ படத்திற்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


