News December 29, 2025
யாராவது கீழே விழுவதை பார்த்தால் சிரிப்பு வருவது ஏன்?

ஒருவர் கீழே விழுவதை பார்த்ததும் பல சமயங்களில் நமக்கு சிரிப்பு வந்திருக்கும். இதற்கு நமது மூளையில் உள்ள மிரர் நியூரான்கள்தான் காரணமாம். அதாவது, ஒருவர் கீழே விழும்போது, நாமே விழுவது போன்ற ஒரு பிரம்மையை இந்த மிரர் நியூரான்கள் ஏற்படுத்துமாம். அப்போது உடம்பில் கிச்சுகிச்சு மூட்டுவது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவதால் சிரிப்பு வருவதாக அறிவியல் சொல்கிறது. 99% பேருக்கு தெரியாத இத்தகவலை SHARE பண்ணுங்க.
Similar News
News February 19, 2026
விஜய்யின் கூட்டணி கனவு நொறுங்கியது

‘ஆட்சியில் பங்கு’ என அறிவித்த விஜய்யின் கூட்டணி கனவு தவிடுபொடி ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. தேமுதிக, புதிய தமிழகம் மௌனம் காத்துவந்த நிலையில், இரு கட்சிகளும் தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என பேசப்பட்டது. இந்நிலையில், தேமுதிக தற்போது திமுக கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டது. இதனால், தனித்து போட்டியிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ள விஜய்யுடன் புதிய தமிழகமும் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
News February 19, 2026
தங்கம் விலை தடாலடியாக மாறியது

கடந்த 3 நாள்களாக தொடர் சரிவை சந்தித்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹2,160 உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் மாலை நேர நிலவரப்படி தங்கம் விலை உயர்ந்து 1 அவுன்ஸ் $4,991.28-ஆக விற்பனையாகிறது. இதன் எதிரொலியால் உள்நாட்டு சந்தையிலும் நாளை தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
News February 19, 2026
ஏழுமலையான் பாதத்தில் அதிமுக வேட்பாளர் லிஸ்ட்!

கடந்த ஏகாதசி நாளன்று EPS திருப்பதியில் தரிசனம் செய்தார். அப்போது அதிமுக சார்பில் போட்டியிடவுள்ள 64 வேட்பாளர்களின் பட்டியலை ஏழுமலையானின் பாதத்தில் வைத்து அவர் வழிபாடு நடத்தியுள்ளார். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க முடியாத அதிமுகவின் செல்வாக்கான தொகுதிகள் அந்த முதற்கட்டப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாம். வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் ஜெ.,வின் பிறந்தநாளில் வெளியாகவுள்ளது.


