News December 29, 2025
மது/புகைப்பிடிப்பதை போன்ற மோசமான பழக்கம்!

இன்ஸ்டா ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் பார்ப்பது மது/புகைப்பிடிப்பதை போன்ற அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக சீன பேராசிரியர் வாங் எச்சரித்துள்ளார். அதிகப்படியான ஸ்க்ரோலிங் கவன சிதறல், மறதி, பதற்றம், மன அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படுத்தும் என கூறியுள்ளார். இதிலிருந்து விடுபட தூங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு மொபைலை ஆஃப் செய்யலாம். உடற்பயிற்சி, விளையாட்டு ஆகியவற்றில் கவனம் செலுத்தலாம்.
Similar News
News February 2, 2026
BREAKING: தங்கம் விலை மேலும் குறைந்தது

தங்கம் விலை இன்று(பிப்.2) சவரனுக்கு ₹7,600 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராமுக்கு ₹950 குறைந்து ₹13,950-க்கும், சவரன் ₹7,600 குறைந்து ₹1,11,600-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் <<19026634>>தங்கம் விலை தொடர் சரிவு<<>>, இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கியதே இன்று தங்கம் விலை மிகப்பெரிய அளவில் குறைய காரணமாகும். SHARE IT.
News February 2, 2026
தேர்தல் அறிக்கையில் இதை அறிவிக்கிறாரா EPS?

தேர்தல் அறிக்கை தயாரிக்க TN மக்களிடம் கருத்து கேட்டுள்ளார் EPS. அப்போது, டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பெரும்பாலான பெண்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதனால் வாக்குறுதியில் மதுவிலக்கை அறிவிப்பது குறித்து EPS மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2016 தேர்தலில் பூரண மதுவிலக்கு வாக்குறுதியை கொடுத்த திமுகவுக்கு அதுவே நெகடிவ்வாக முடிந்தது. இதனால் EPS குழப்பத்தில் இருக்கிறார் என்கின்றனர்.
News February 2, 2026
இம்மாதம் திமுகவை குறிவைத்து 3 ரெய்டுகள்?

திமுக தலைவர்கள் மீது இம்மாதம் 2 – 3 ரெய்டுகள் நடத்தப்பட இருப்பதாக ஆ.ராசா ஆருடம் தெரிவித்துள்ளார். அப்படி எந்த ரெய்டு வந்தாலும் திமுக கொடுக்கும் ரெய்டுகளுக்கு அமித்ஷாவும், மோடியும் விரைவில் காணாமல் போவார்கள் என்றார். வரும் தேர்தலில் திமுக வெற்றிபெற்றால், 2027-ல் டெல்லியில் ஆட்சிமாற்றம் நடக்கும் எனவும், புதிய ஆட்சியில் திமுக பங்கெடுக்கும் என்றும் அவர் கூறினார்.


