News December 29, 2025
பள்ளிகளுக்கு மேலும் விடுமுறை.. அரசு அறிவிப்பு

அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் ஜன.5-ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை நாள்காட்டிபடி, ஜனவரியில் மேலும் 4 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறையாகும். அதாவது, ஜன.15, 16, 17-ல் பொங்கல் பண்டிகை, ஜன.26 -ல் குடியரசு தினம் ஆகிய நாள்களில் பள்ளிகள் செயல்படாது. மேலும், 2026-ல் மொத்தமாக பள்ளிகளுக்கு 26 நாள்கள் அரசு விடுமுறையாகும். தொடர் விடுமுறையை கொண்டாடுங்கள் மாணவர்களே!
Similar News
News December 30, 2025
ராதிகா மீது கோபத்தில் இருந்தேன்: வரலட்சுமி

தனது பெற்றோர்கள் (சரத்குமார் – சாயா தேவி) பிரிந்ததற்கு ராதிகாதான் காரணம் என சிறுவயதில் நினைத்ததாக வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். இதனால் ராதிகா மீது கோபத்தில் இருந்தேன். ஆனால் அந்த கோபம் வலியில் இருந்து வந்ததே தவிர உண்மையின் அடிப்படையில் அல்ல. மெச்சூரிட்டி வந்ததும், எனது பெற்றோர்கள் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் பிரிந்ததை புரிந்துகொண்டதும், ராதிகா மீது அன்பு உருவானதாக தெரிவித்துள்ளார்.
News December 30, 2025
ஒரே வாரத்தில் பாத வெடிப்பு மறைய TIPS

➤விளக்கெண்ணெய் 20 மில்லி எடுத்துக்கொள்ளுங்கள் ➤அதை சூடாக்கி 2 சின்ன வெங்காயம், 1 சிட்டிகை மஞ்சள் சேர்க்கவும் ➤அடுப்பில் இருந்து இறக்கி ஆற வையுங்கள் ➤1 சிட்டிகை உப்பு சேர்த்து, மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளுங்கள் ➤காற்று புகாத டப்பாவில் அடைத்து ஃபிரிட்ஜில் வையுங்கள் ➤தினமும் இரவு, வெடிப்பு உள்ள இடத்தில் தடவி அப்படியே விடுங்கள் ➤ 1 வாரத்திலேயே பலன் கிடைக்கும். SHARE.
News December 30, 2025
மீண்டும் அமலாகிறதா பழைய ஓய்வூதிய திட்டம்?

பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை திமுக தற்போது வரை நிறைவேற்றவில்லை என்பதால் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, இதுதொடர்பாக ஆய்வறிக்கை அளிப்பதற்காக ககன் தீப் சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், இக்குழு இன்று ஓய்வூதியத் திட்ட அறிக்கையை CM ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளது. எனவே, மகிழ்ச்சியான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.


