News December 29, 2025
கரூர்:ஆண் குழந்தை இருந்தால் ரூ.3,14,572 ?

கரூர் மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT
Similar News
News January 11, 2026
நீதிமன்ற உத்தரவால் கரூரில் அதிரடி நடவடிக்கை!

கரூர் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் குடியிருப்பவர்கள் மற்றும் கடை வைத்திருப்பவர்கள் உரிய வாடகை அல்லது குத்தகை செலுத்த வேண்டும், தவறும் பட்சத்தில் வீடுகள் மற்றும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில், நேற்று கோயில் செயல் அலுவலர் சுகுணா தலைமையிலான அதிகாரிகள், சுமார் 20 கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்தனர்.
News January 11, 2026
கரூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News January 11, 2026
கரூரில் வசமாக சிக்கிய இருவர்!

கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா பாலவிடுதி மற்றும் சிந்தாமணி பட்டி காவல் நிலைய பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளனர்.தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் கடவூரில் லாட்டரி விற்ற அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (51) மற்றும் மைலம்பட்டி கடைவீதியில் லாட்டரி விற்ற அதே பகுதியைச் சேர்ந்த பிச்சை முகமது (48) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிந்து தேற்று கைது செய்தனர்.


