News December 29, 2025
மதுரை: டூவீலர் ஓட்டிச் சென்ற சிறுவன் விபத்தில் பலி

மதுரை விராட்டிபத்தை சேர்ந்த பால்பாண்டி மகன் பரிசித் பாஷ்யம்(14) ,அவரது நண்பர் விகாஸ் சக்திவேல் (14) அழைத்து கொண்டு புல்லட் பைக்கில் மாடக்குளம் நான்கு வழி சாலையில் நேற்று சென்றுள்ளார். கட்டுப்பாட்டை இழந்து டூவீலர் கவிழ்ந்ததில் படுகாயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிசித் இறந்து போனார். நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 13, 2026
மதுரையில் நவீன மெய்நிகர் ஆய்வகம் உள்ள அரசுப் பள்ளி

மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளியில் ஹெச்.டி.எப்.சி. வங்கியின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புதிய தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்ட மெய்நிகர் ஆய்வகத்தை (virtual Lab) மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், MLA பூமிநாதன் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் கல்வி குழு தலைவர் ரவிச்சந்திரன் மாமன்ற உறுப்பினர், அதிகாரிகள் பங்கேற்றனர். *ஷேர் பண்ணுங்க.
News January 13, 2026
மதுரை: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800-425-3993 அழைக்கவும். (SHARE பண்ணுங்க)
News January 13, 2026
மதுரையில் பிறந்த 10 நாளான குழந்தை உயிரிழப்பு

உசிலம்பட்டி அருகே நல்ல தேவன்பட்டியை சேர்ந்தவர் ராஜாராம் மனைவி பரமேஸ்வரி(31). இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை உசிலம்பட்டி மருத்துவமனையில் பிறந்தது. இரவு குழந்தைக்கு பால் கொடுத்து தொட்டிலில் தூங்க வைத்து உள்ளனர். நேற்று காலையில் எழுந்து பார்த்த போது, குடித்த பாலை கக்கி மூச்சுத் திணறி குழந்தை தொட்டிலில் இறந்து கிடந்தது. இதுக்குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரணை.


