News December 29, 2025
BSNL அதிரடி ஆஃபர்.. அதிகரித்த டேட்டா!

வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர்களை அள்ளி வீசி வரும் BSNL நிறுவனம், முக்கியமான ரீசார்ஜ் பிளானில் டேட்டாவை அதிகரித்துள்ளது. ₹225-க்கு ரீசார்ஜ் செய்தால் 1 மாதத்திற்கு தினமும் 2.5GB டேட்டா சேவையை பெறலாம். தற்போது, அது தினமும் 3GB ஆக மாற்றப்பட்டுள்ளது. இதே சேவையை பிற நெட்வொர்க்குகளில் பெற ₹400 வரை செலவிட வேண்டும். இந்த ஆஃபர் ஜன.31-ம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும். உடனே முந்துங்கள் நண்பர்களே!
Similar News
News December 30, 2025
சொர்க்க வாசல் திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர்

பெரம்பலூர் மரகத வள்ளி தாயார் சமேத மதனகோபால் சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தார். மேலும் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஆ.கலியபெருமாள் உடன் இருந்தார்.
News December 30, 2025
ஒரேநாளில் ₹23,000 குறைந்தது.. ALL TIME RECORD

இதுவரை இல்லாத வகையில் வெள்ளி விலை வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு ₹23 குறைந்து ₹258-க்கும், கிலோ வெள்ளி ₹23,000 குறைந்து ₹2,58,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாள்களாக வெள்ளி விலை கிலோவுக்கு ₹41,000 உயர்ந்த நிலையில், இன்று குறைந்திருப்பது மக்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.
News December 30, 2025
LPG கேஸ்: இதை செய்யலன்னா பெரிய RISK!

LPG சிலிண்டரை பாதுகாப்பாக வைத்து பயன்படுத்த சில வழிகள் உள்ளன. ➤சிலிண்டரை சாய்த்து வைக்க வேண்டாம் ➤காற்றோட்டமான இடத்தில் வையுங்கள் ➤வெப்பம் அதிகமாக உள்ள இடத்திலோ, மின்சாதனங்களுக்கு அருகிலோ வைக்க வேண்டாம் ➤சமைக்கும்போது நைலான் & பாலியஸ்டர் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை அணிய வேண்டாம் ➤சிலிண்டரை அடுப்போடு இணைக்கும் ரப்பர் குழாயை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றவேண்டும். SHARE.


