News December 29, 2025
கிருஷ்ணகிரியில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்

கிருஷ்ணகிரியில் இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்கள் நேற்று (டிச.28) 2வது நாளாக நடந்தது. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேலநிலைப்பள்ளி, பழையபேட்டை நகராட்சி மேல்நிலைப்பள்ளி, பழைய சப்-ஜெயில் சாலை நகராட்சி நடுநிலைப்-பள்ளி, மகளிர் கலை கல்லுாரி ஆகிய இடங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்கள் நடந்தன.
Similar News
News December 31, 2025
கிருஷ்ணகிரி: 2025-ல் குறைந்த குற்றச் சம்பவங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டை விட 2025-ல் கொலை (14%), வழிப்பறி (32%) மற்றும் கள்ளத்தனம் (30%) உள்ளிட்ட குற்றங்கள் கணிசமாகக் குறைந்துள்ளதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது. சாலை விபத்து மரணங்கள் 4% குறைந்துள்ள நிலையில், போக்குவரத்து விதிமீறல்களுக்காக ₹1.85 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், ₹1.15 கோடி மதிப்பிலான மது மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
News December 31, 2025
கிருஷ்ணகிரி: மக்களே இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News December 31, 2025
கிருஷ்ணகிரி விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

கிருஷ்ணகிரியில், 2025-26ம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் ராபி பருவ நெல், ராகி, உளுந்து, பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன்பெற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் காளிமுத்து தலைமையில் ஏக்கர் நெல்லுக்கு ரூ.474.90, ராகிக்கு ரூ.174, உளுந்திற்கு ரூ.255 தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை கொள்ளவும்.


