News December 29, 2025

வேலூர்:இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <>-1<<>> என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News January 12, 2026

பொங்கல் பண்டிகையால் ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளன. வேலூர்–நாகர்கோவில் ரூ.3,600, வேலூர்–நெல்லை ரூ.3,500 என வசூலிக்கப்படுகிறது. வழக்கத்தை விட அதிகமாக கட்டணம் உயர்த்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பாதிக்கப்படுவதாகவும், அரசு உடனடி கட்டுப்பாடு விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

News January 12, 2026

தொரப்பாடி சிறையில் 25 பேர் பரோல் கேட்டு விண்ணப்பம்

image

பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடுவதற்கு வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறையில் இருந்து 25-க்கும் மேற்பட்ட கைதிகள் தற்போது வரை பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பலர் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது. கைதிகளின் நன்னடத்தையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு 4 அல்லது 6 நாட்கள் பரோல் வழங்கப்படும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News January 12, 2026

வேலூர் மாவட்டத்தில் 209 மனுக்களுக்கு தீர்வு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அளவில் பொது விநியோக திட்டத்தின் சார்பில் ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம் சேர்த்தல் திருத்தம் மேற்கொள்ள சிறப்பு குறை தீர்ப்பு முகாம் கடந்த 10-ம் தேதி நடந்தது. இந்த முகாமில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 209 மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!