News December 29, 2025

செளமியா அன்புமணியின் பதவியில் காந்திமதி

image

பசுமைத் தாயகம் அமைப்பில் இருந்து செளமியா அன்புமணியை நீக்கி, சேலத்தில் நடைபெற்று வரும் ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பசுமைத் தாயகம் அமைப்பின் புதிய தலைவராக காந்திமதி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் பாமக செயல்தலைவராக செயல்படுவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மே 28 உடன் அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் முடிவடைந்ததாகவும் பொதுக்குழுவில் தெரிவிக்கப்பட்டது.

Similar News

News February 2, 2026

FLASH: முன்னாள் அமைச்சர் காலமானார்

image

ராஜஸ்தான் மாநில பாஜக முக்கிய தலைவரும், EX அமைச்சருமான ஹேம் சிங் பதானா(55) காலமானார். கேன்சர் பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்றுமுன் அவரது உயிர் பிரிந்தது. குர்ஜார் சமூகத்தின் முக்கிய முகமாக அறியப்பட்ட ஹேம் சிங் பதானா, வசுந்தரா ராஜேவின் அமைச்சரவையில் முக்கிய பங்கு வகித்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News February 2, 2026

தமிழக அரசு என் படத்த கண்டுக்கல: சேரன் வேதனை!

image

‘திருமணம்’ படத்திற்கு தமிழக அரசின் விருது கிடைக்காததை இயக்குநர் சேரன் விமர்சித்துள்ளார். தேர்வு குழுவினரால் தனது படம் கண்டுகொள்ளப்படாமல் போனது அவர்களின் நுண்ணிய பார்வை அற்ற தன்மை அல்லது தங்களை சார்ந்துள்ளவர்களுக்கு மட்டுமே விருது கொடுக்கும் தன்மையை காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், நேர்மையான முறையில் பாரபட்சமின்றி விருதுகள் சென்றைடைய வேண்டும் எனவும் தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News February 2, 2026

மத வன்முறையை தூண்டுவதே பாஜகவின் எண்ணம்: CM

image

எந்த வகையில் மத வன்முறையை தூண்டலாம் என்பதே பாஜகவின் நோக்கம் என CM ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பாஜகவின் நோக்கத்துக்கு மௌன சாட்சியாக அதிமுக அமைதி காக்கிறதாகவும், தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜகவுக்கு அதிமுக சாமரம் வீசும் அடிமையாக உள்ளதாகவும் விமர்சித்துள்ளார். மாநில சுயாட்சி என்றாலே அதிமுக பயந்து ஒளிந்துகொள்கிறது எனவும் தொண்டர்களுக்கு CM ஸ்டாலின் எழுதிய மடலில் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!