News December 29, 2025
துணை குடியரசுத் தலைவரை வரவேற்ற திருச்சி ஆட்சியர்

இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று (டிச.29) சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். இதனை ஒட்டி திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன், விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து சி.பி.ராதாகிருஷ்ணனை வரவேற்றார். இந்நிகழ்வில், அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Similar News
News January 12, 2026
திருச்சி: டாரஸ் லாரி மோதி போலீசார் பலி

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சஞ்சீவிநகர் பகுதியில் நேற்று நடைபெற்ற சாலை விபத்தில் திருச்சி மாநகர் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய ஆதிராஜ் கிருஷ்ணன் என்ற போலீசார், டாரஸ் லாரி மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது இறப்புக்கு காவல் துறை அதிகாரிகள், காவலர்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 11, 2026
திருச்சி: செல்வம் பெருக இந்த கோயிலுக்கு போங்க!

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள உத்தமர்கோயிலுக்கு சென்று வழிபட்டால், கல்வி, ஞானம் மற்றும் செல்வம் பெருகும் என்றும், மும்மூர்த்திகளும் தேவியர்களோடு அருள்வதால் இங்கு வழிபட்டால் குடும்ப ஒற்றுமை மேலோங்கி சகல தோஷங்களும் நீங்கும் என நம்பப்படுகிறது. மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அம்பாள்களுடன் காட்சி தருவதே இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். இத்தகவலை SHARE பண்ணுங்க.