News December 29, 2025
தூத்துக்குடி: பணம் விவகாரத்தில் தாய், மகன் கடத்தல்!

ஸ்ரீவை பகுதியை சேர்ந்த ராஜபாண்டி, தேனியை சேர்ந்த மல்லிகாவிடம் (58) ரூ.5 லட்சம் கடன் கொடுத்துள்ளார். மல்லிகா கடந்த 2 மாதமாக வட்டி கட்டாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் ராஜபாண்டி 5 பேருடன் மல்லிகா வீட்டில் அத்துமீறி நுழைந்து, மல்லிகா, அவரது மகன் துர்கேஷை தாக்கி 15 பவுன் நகை, ரூ.50,000 எடுத்துள்ளனர். பின் காரில் கடத்தி திருமங்கலம் பகுதியில் இறக்கி விட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
Similar News
News January 11, 2026
தூத்துக்குடி: போன் காணாமல் போச்சா? இனி கவலை வேண்டாம்!

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News January 11, 2026
தூத்துக்குடியில் ஆதார் மூலம் பணம் எடுக்கலாம்

தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இதில், குழந்தைகளுக்கான சேமிப்பு, முதியோருக்கான சேமிப்பு, குறைந்த செலவில் விபத்து காப்பீடு ஆகியவற்றை அஞ்சலகங்களில் ஜீரோ பேலன்ஸ் அகன்வுட் தொடங்கி பயன்பெறலாம். ஆதார் அட்டை மூலம் அனைத்து வங்கி கணக்கில் இருந்தும் பணம் எடுத்துக்கொள்ளும் சேவை அஞ்சலகங்களில் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
News January 11, 2026
தூத்துக்குடியில் திமுக பிரமுகரின் பைக் எரிப்பு

தூத்துக்குடி குரூஸ்புரத்தை சேர்ந்த டேனியல் மாநகர திமுக மீனவரணி அமைப்பாளராக உள்ளார். இவரது மனைவி மெட்டில்டா தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். டேனியல் தனது பைக்கை வீட்டின் முன்நிறுத்தியிருந்தார். இந்நிலையில், மர்ம நபர்கள் அந்த பைக்குக்கு தீ வைத்துவிட்டு தப்பியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வடபாகம் போலீசார் விசாரணையில் சாம்சன் என்பவர் பைக்கை தீ வைத்து எரித்தது தெரியவந்தது.


