News May 2, 2024
அஜித்துக்கு அழைப்பு விடுக்கும் ஜெயக்குமார்

நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். அரசியல் மட்டுமல்ல, சினிமா நிகழ்வுகளில் பங்கேற்பதைக் கூட அஜித் தவிர்த்து வருகிறார். அப்படியிருக்கும் நிலையில், அவரை அதிமுக தலைவர்கள் விடுவதாக இல்லை. அவ்வப்போது அவர் அரசியலுக்கு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
Similar News
News March 24, 2026
மதுரை: ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல்

மதுரை மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.25.66 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரூ.15.74 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் நேற்று பறிமுதல் செய்தனா். இதுதவிர மதுரை மத்தியம் ரூ.1.38 லட்சம், மதுரை கிழக்கு ரூ.1.30 லட்சம், மதுரை மேற்கு ரூ.2.71 லட்சம், திருமங்கலம் ரூ.1.64 லட்சம், உசிலம்பட்டியில் ரூ.6.08 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
News March 24, 2026
₹15,000 சம்பளம், 5000 பணியிடங்கள்… APPLY NOW

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 5,000 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ₹15,000 வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, தாய் மொழியில் பேச்சு திறன் அடிப்படையில் இப்பணிக்கு ஆள்கள் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 3-ம் தேதிக்குள் இந்த <
News March 24, 2026
கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் சரிவு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 15% குறைந்துள்ளது. ஈரான் மீதான தாக்குதலை 5 நாள்களுக்கு நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், இந்த விலை குறைப்பு நிகழ்ந்துள்ளது. கடந்த வாரத்தில் 119 டாலர்களை கடந்திருந்த நிலையில், மீண்டும் 102 டாலர்களுக்கும் கீழ் குறைந்துள்ளது. இந்த விலை சரிவால் இந்தியாவில் எரிபொருள்கள் விலை உயர்வு அபாயம் சற்று நீங்கியுள்ளது.


