News May 2, 2024

நடப்பு ஆண்டில் 70 ஆயிரம் பேர் பணி நீக்கம்

image

தொழில்நுட்ப நிறுவனங்கள் நடப்பு ஆண்டில் 70,000க்கு மேற்பட்ட ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில், டெஸ்லா, ஆப்பிள், கூகுள் உள்ளிட்ட பெரும் நிறுவனங்களும் அடங்கும். அதன்படி, ஆப்பிள் நிறுவனம் 614 ஊழியர்களையும், அமேசான் அதன் கிளவுட் பிரிவில் 100 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. அதேபோல், கூகுள், இன்டெல், பைஜூஸ், ஓலா ஆகிய நிறுவனங்களும் பணியாளர்களை நீக்கியுள்ளது.

Similar News

News March 19, 2026

இனி மழை அப்டேட் கொடுக்கப் போவது இவர்தான்!

image

தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் (RMC) தலைவராக விஞ்ஞானி சிவானந்த தாமோதர பை நியமிக்கப்பட்டுள்ளார். வானிலை ஆய்வு மையத்தில் 1992-ல் சேர்ந்த இவர், சுமார் 34 ஆண்டுகள் பணி அனுபவம் மிக்கவர். இதையடுத்து, தென்மண்டல வானிலை மையத் தலைவராக கூடுதல் பொறுப்பு வகித்துவந்த அமுதா இப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

News March 19, 2026

சற்றுமுன்: மீண்டும் அதிமுகவில் இணைந்தார்

image

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அக்கட்சியில் ஐக்கியமாகி வருகின்றனர். அந்த வகையில், வட சென்னை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ரமேஷ், EPS முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னையில் தீவிரமாக களப்பணியாற்றுமாறு அவரிடம் EPS அறிவுறுத்தியுள்ளாராம். இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த J கிருஷ்ணமூர்த்தியும் மீண்டும் தாய் கழகத்திற்கு திரும்பியுள்ளார்.

News March 19, 2026

41 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து.. அரசு அதிரடி

image

பொது விநியோகத் திட்டத்தில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பார்லிமெண்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும், 2025-ல் மட்டும் 41.41 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அரசின் நலத்திட்டங்கள் உண்மையான பயனாளிகளிடம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் போலி ரேஷன் கார்டுகள் களையெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

error: Content is protected !!