News December 29, 2025

மதுரை: பேச்சை மீறிய மனைவி: ஆசிட் குடித்து கணவர் தற்கொலை

image

மதுரை சிந்­தாமணியை சேர்ந்­த­ முரு­கா­னந்­தம்(38) அப்­பள கம்­பெனி நடத்தி வருகிறார். இவர் மனைவி கோவிலுக்கு அழைத்து செல்லும்­படி பல­முறை கூறி­யும், இவர் அழைத்து செல்­லா­ததால் தன் தந்­தை­யு­டன் கோவிலுக்கு சென்றார். தன் பேச்சை மனைவி மீறியதால் மனமு­டைந்த கணவர்
ஆசிட்டை குடித்தார். மருத்துவம­னை­ கொண்டு செல்லப்பட்டவர் அங்கு நேற்று உயிரிழந்­தார். அவனியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News January 21, 2026

மதுரையில் இன்று பல்வேறு இடங்களில் மின்தடை..!

image

மதுரை மாவட்டத்தில் முக்கிய இடங்களில், மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அரிட்டாபட்டி, குன்னத்தூர், திருவாதவூர், கல்லுப்பட்டி, கள்ளிக்குடி உள்ளிட்ட துணைமின் நிலையங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (ஜன.21) புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என, மின் செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கேற்ப உங்கள் பணிகளை திட்டமிட்டு கொள்ளுங்கள். SHARE IT..

News January 21, 2026

சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவில் 50 பேருக்கே அனுமதி!

image

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவில் 50 பேர் மட்டுமே பங்கேற்கலாம் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய கோரி தர்கா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிபதிகள் கூறியதாவது, இது இடைக்கால உத்தரவு; மலை உச்சியில் விழாவில் கலந்து கொள்ளும் கணக்கை காவல்துறை மற்றும் தொல்லியல் துறை முடிவு செய்யலாம்.

News January 20, 2026

மதுரை: வேன் மோதி டூவீலரில் சென்ற முதியவர் பரிதாப பலி

image

அ.வல்லாளபட்டி சாம்பிராணி பட்டியைச் சேர்ந்தவர் மூக்கன்(70). நேற்று மாலை தனது டூவீலரில் இவர் மேலூர், அழகர்கோவில் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த வேன் அழகாபுரி அருகே இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். மேலூர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லபட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். வேன் டிரைவரை கைது செய்து மேலவளவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!