News May 2, 2024
BREAKING கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

கரியாபட்டி அருகே நேற்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இதில் கல்குவாரியின் உரிமையாளர் சேது நேற்று கைது செய்யப்பட்டார். வெடிபொருள் சேமிப்பு கிடங்கின் உரிமையாளர் ராஜ்குமார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக 4 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான ராம்ஜி, ராமமூர்த்தியை போலிசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
Similar News
News March 6, 2026
விருதுநகர்: கோயில் திருவிழாவில் தகராறு: 13 பேர் கைது

விருதுநகர், அச்சங்குளம் கிராமத்தில் ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட கோயில் நிர்வகிப்பது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்னை இருந்து வந்ததையடுத்து பொங்கல் திருவிழா கொண்டாடினர். இந்நிலையில் பாடலுக்கு ஆடிய போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்ட ஒருவரை ஒருவர் தாக்கினர். இதில் ஒரு தரப்பை சேர்ந்த சொக்கலிங்கம் உள்பட 8 பேர், எதிர் தரப்பில் அஜித்குமார் உள்பட 5 பேர் என மொத்தம் 13 பேரை கைது செய்தனர்.
News March 5, 2026
விருதுநகர்: இனி BANKக்கு போக தேவையில்லை!

விருதுநகர் மக்களே, உங்க வங்கில Balance பணம் எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே வங்கிக்கும் இல்ல அடிக்கடி UPI – ஐ திறந்து பாக்க தேவை இல்லை.
Indian bank : 87544 24242
SBI: 90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 1800 1030
உங்க வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணு
News March 5, 2026
ஊரக வாழ்வாதார இயக்கப் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மாவட்ட அளவில் அரசு திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதற்காகவும், அனைத்து துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்திடவும் தகுதியுள்ள நபர்கள் வரும் 09.03.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்களை மின்னஞ்சல் முகவரி clcvnr2021@gmail.com மூலகமாகவோ விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.


