News December 29, 2025

திருப்பத்தூர்: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க

Similar News

News January 13, 2026

திருப்பத்தூர்: தடகள வீரருக்கு குடியரசு தின விழா அழைப்பு

image

ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் டி.கே.விஷால். தடகள வீரரான இவருக்கு இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக அழைப்பிதழ் வந்துள்ளது. இந்திய ஜனாதிபதி மாளிகையில் குடியரசு விழாவில் கலந்துகொள்ள வாலிபருக்கு கிடைத்த வாய்பை குறித்து அப்பகுதி மக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர்க்கு பெருமை சேர்ந்த மாணவனின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.

News January 13, 2026

திருப்பத்தூரில் டாஸ்மாக் இயங்காது!

image

தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் வரும் ஜனவரி 16 (திருவள்ளுவர் தினம்) மற்றும் 26 (குடியரசு தினம்) தேதிகளில் இயங்காது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி சில்லரை விற்பனை கடைகள், மதுபான கூடங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டலில் உள்ள மதுபான கூடங்கள் அனைத்தையும் 2 நாட்கள் மூட மாவட்ட ஆட்சியர் சிவசவுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.

News January 13, 2026

திருப்பத்தூரில் 248 பேர் பலி!

image

திருப்பத்தூரில், 2025-ல் 856 விபத்து வழக்குகள் பதிவாகி உள்ளது. இதில் 248 பேர் உயிரிழந்துள்ளனர், 1,016 பேர் காயமடைந்து உள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்துகளில் 142 உயிரிழப்பு மற்றும் 246 உயிரிழப்பில்லா வழக்குகளும், மாநில நெடுஞ்சாலையில் 37 உயிரிழப்பு, 181 உயிரிழப்பில்லா வழக்குகளும் பதிவாகியுள்ளது. கிராம சாலைகளில் 58 உயிரிழப்பு மற்றும் 192 உயிரிழப்பில்லா வழக்குகள் பதிவாகியுள்ளது.

error: Content is protected !!