News December 29, 2025
தருமபுரி: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க
Similar News
News January 2, 2026
தருமபுரி: லாரி மீது வேன் மோதி விபத்து – 10 பேர் காயம்!

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கோவிலுக்கு சென்று திரும்பிய வேன், அலமேலுபுரம் அருகே முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் திருப்பத்தூர் மாவட்டம், எல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (32), சுரேஷ் (36) வீரபத்திரன் (45), ஜெயபால் (40) மற்றும் டிராவல்ஸ் டிரைவர் விஜய் (22) உள்ளிட்ட 10 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 2, 2026
தருமபுரி: பைக்கில் சென்றவருக்கு ஏற்பட்ட சோகம்!

தருமபுரி, கம்பைநல்லூர் அடுத்த எலவடை பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (52) கூலி தொழிலாளி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் நேற்று (ஜன.1) செல்லும் பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 2, 2026
தருமபுரியில் இலவச பயிற்சி வகுப்புகள் – ஆட்சியர் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த GROUP II-IIA முதன்மை தேர்வு மற்றும் 2026ஆம் ஆண்டிற்கான GROUP II-IIA முதல்நிலைதேர்வு ஆகிய தேர்வுகளுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் 05.01.2026 அன்று முதல் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் துவங்கப்பட்டு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரந்தோறும் தொடர்ந்து நடைபெற உள்ளது. என தருமபுரி கலெக்டர் சதீஷ் தகவல்.


