News December 29, 2025
திருவள்ளூர் வருகிறார் இ.பி.எஸ்!

திருவள்ளூர்: திருத்தணி அடுத்துள்ள விரகநல்லூர் பகுதியில் இன்று(டிச.29) எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்து, பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில், அப்பகுதியில் அவரை வரவேற்க கட்-அவுட், பேனர்கள் வைக்கப்பட்டு, சிறப்பான ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இன்று மாலை அவர் வருகை தரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 12, 2026
திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட தனித்தேர்வு மையங்களில் ஜூன் 2012 முதல் ஆகஸ்ட் 2022 வரையிலான பருவங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் துணைத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின் அம்மதிப்பெண் சான்றிதழ்கள் அவர்கள் தேர்வெழுதிய அந்தந்த தேர்வு மையங்களில் நேரடியாக விநியோகம் செய்யப்பட்டது என ஆட்சியர் தெரிவித்தார்.
News January 12, 2026
திருவள்ளூரில் மீண்டும் அரங்கேறிய கொடூரம்!

உ.பி., மாநிலத்தைச் சேர்ந்தவர் ராமாசங்கர் இவர் மப்பேடு பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை வழக்கம்போல் பணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ராமாசங்கரை கொடூரமாக தாக்கி அவரிடமிருந்து ரூ. 10,000 மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தாக்குதலுக்கு ஆளான ராமாசங்கர் திருவள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News January 12, 2026
திருவள்ளூர்: ரூ.50 கட்டினால்.. ரூ.1 லட்சம் லாபம்!

திருவள்ளூர்: போஸ்ட் ஆபிஸில் உள்ள RD திட்டத்தில் தினமும் ரூ.50 என்ற அடிப்படையில் மாதம் ரூ.1,500 கட்டினால், 5 ஆண்டு முடிவில் 6.7% வட்டியுடன் 1,07,050 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். இதே போல் 100 ரூபாய் என்ற வீதத்தில் சேமித்தால் 2,12,972 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். எதிர்காலத்தில் இந்த தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தில் இணைய அருகில் உள்ள போஸ்ட் ஆபிஸ் அலுவலகத்தை அனுகவும்.


