News December 29, 2025
தருமபுரி: குறைந்த விலையில் சொந்த வீடு!

தருமபுரி மாவட்ட மக்களே.., சொந்த வீடு கட்டுவது உங்கள் கனவா..? நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு குறைந்த விலையில் சொந்த வீடு வழங்கும் திட்டம் தான் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’. இதன் மூலம் உங்களுக்கு மலிவு விலையில் வீடு வழங்கப்படுவதோடு, மானிய வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
Similar News
News January 5, 2026
தருமபுரியில் ஆள் மாறாட்டம்!

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தேவராஜ பாளையத்தைச் சேர்ந்தவர் சின்னா கவுண்டர், மலேசியாவில் வசித்து வந்தார். இவருக்கு சொந்தமான ஊரில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. சின்னா கவுண்டர் பல ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சின்னா கவுண்டர் எனும் மற்றொரு நபர் அந்த நிலத்திற்கு தனது பெயரை வைத்து போலிப் பத்திரத்தை தயாரித்து உறவினருக்கு விற்க முயன்றார். இதுகுறித்த புகாரில் இருவர் கைதானனர்.
News January 5, 2026
தருமபுரி கலெக்டர் அறிவித்தார்!

திருநங்கை இச்சமுகத்தில் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து தனித்திறமையை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த வருகின்றனர். கடந்த 2025-2026ம் ஆண்டு நிதிக்கான சிறந்த திருநங்கைகளுக்கான விருது, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் திருநங்கைகள் தினத்தன்று பாராட்டுச் சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கப்படுகின்றது என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
News January 5, 2026
தருமபுரியில் இளம்பெண் துடிதுடித்து பலி!

பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த கோமதி (30). தனது தோழி சந்தியாவுடன் தேசிய நெடுஞ்சாலையை கடந்து, எதிரே உள்ள டீ கடைக்கு நடந்து சென்றனர். அப்போது, தருமபுரி நோக்கி வந்த சரக்கு வாகனம் வேகமாக மோதியதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த சந்தியா பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


