News December 29, 2025
ATM-ல் உங்கள் பணம் சிக்கி கொண்டதா? இத பண்ணுங்க

➤அக்கவுண்டில் உள்ள பணம் குறைந்திருக்கிறதா பாருங்கள் ➤ATM இருக்கும் இடம், தேதி/நேரம், தொகை ஆகியவற்றை குறித்துவைத்து கொள்ளுங்கள் ➤வங்கிக்கு நேரடியாக செல்ல முடியவில்லை என்றால், மொபைல் APP-ல் “Failed ATM Transaction” என்ற ஆப்ஷன் மூலம் புகாரளியுங்கள் ➤5 நாள்களில் உங்கள் பணம் உங்களிடம் வந்துசேரும். தாமதமாகும் பட்சத்தில், வங்கி உங்களுக்கு நாளொன்றுக்கு ₹100 இழப்பீடு வழங்கவேண்டும். SHARE.
Similar News
News January 9, 2026
ஷபாலி வர்மாவுக்கு ஐசிசி விருது?

ஐசிசியின் டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனைக்கான விருது பட்டியலில் ஷபாலி வர்மா இடம்பெற்றுள்ளார். இலங்கைக்கு எதிரான டி20 தொடரில், ஷபாலி வர்மா 2 அரைசதங்கள் உள்பட 241 ரன்கள் குவித்திருந்தார். தொடர் நாயகி விருதையும் அவர் வென்ற நிலையில், ஐசிசி விருதுக்கு நாமினேட் ஆகியுள்ளார். இப்பட்டியலில், அயர்லாந்து தொடரில் அதிரடி காட்டிய தென்னாப்பிரிக்கா கேப்டன் லாரா வோல்வார்ட் மற்றும் சுனே லூஸ் உள்ளனர்.
News January 9, 2026
எந்த உணவை எத்தனை நாள் ஃபிரிட்ஜில் வைக்கலாம்?

உணவுகளை எத்தனை நாள் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம் என்பதற்கான கால அளவை FDA பரிந்துரைத்துள்ளது. அந்த கால அளவை மீறினால் உணவு நஞ்சாகி வயிற்றுப் போக்கு, வாந்தி போன்ற பிரச்னை ஏற்படலாம். மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கம் Swipe செய்து முழு விவரத்தை தெரிஞ்சிக்கோங்க. நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. முடிந்த வரையில் ஃப்ரிட்ஜில் உணவுகள் வைப்பதை தவிருங்கள். ஆரோக்கியம் காக்க ஃப்ரெஷ்ஷாக சாப்பிடுங்கள்.
News January 9, 2026
BREAKING: ஜனநாயகனுக்கு U/A சான்று வழங்க உத்தரவு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு உடனடியாக U/A <<18789661>>தணிக்கை சான்றிதழ்<<>> வழங்க வேண்டும் என தணிக்கை வாரியத்திற்கு மெட்ராஸ் HC உத்தரவிட்டுள்ளது. மறு தணிக்கைக்கு அனுப்பிய உத்தரவையும் நீதிபதி ஆஷா ரத்து செய்துள்ளார். முன்னதாக, தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் ஜனநாயகன் ரிலீஸை ஜன.9-ல் (இன்று) இருந்து ஒத்திவைப்பதாக தெரிவித்த படக்குழு, புதிய ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறியிருந்தது.


