News December 29, 2025
ஓரங்கட்டப்படுகிறாரா ரிஷப் பண்ட்?

T20 WC-யில் இடம் கிடைக்காத பண்ட் NZ-க்கு எதிரான ODI தொடரிலும் ஓரங்கட்டப்படலாம் என கூறப்படுகிறது. இஷான் கிஷன் T20 WC அணியை தொடர்ந்து NZ-க்கு எதிரான ODI தொடரிலும் இடம் பெறலாம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக, பண்ட்தான் அணியில் இருந்து நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. T20, ODI-ல் ஓரங்கட்டப்படும் அவர், முழு நேர டெஸ்ட் வீரராக மாறலாம் எனவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
Similar News
News January 20, 2026
தருமபுரியில் அதிரடி ஆய்வு!

தருமபுரி உணவு பாதுகாப்பு துறை சார்பில் நேற்று (ஜன.19) மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. நேற்று இரவு மாவட்ட நியமன அலுவலர் கைலாஷ்குமார், தருமபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் நகராட்சி நகர் நல அலுவலர் லட்சியவர்ணா உள்ளிட்ட குழுவினர் ராஜகோபால் பூங்கா அருகே உள்ள தள்ளுவண்டி மற்றும் துரித உணவு கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
News January 20, 2026
Spiderman-ஆக மாறும் தனுஷ்?

சினிமா ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ள ‘Avengers: Doomsday’ படத்தில் தனுஷ், Spiderman கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வைரலாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும், ரசிகர்கள் குதூகலத்தில் ஆழ்ந்துள்ளனர். Doomsday பட இயக்குநர்கள் ரூசோ சகோதரர்களின் ‘The Greyman’ படத்தில் தனுஷ் ஏற்கெனவே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Spiderman-ஆக எப்படி இருப்பார் தனுஷ்?
News January 20, 2026
கவர்னர் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் CPI

குடியரசு தின விழாவையொட்டி நடைபெறும் கவர்னர் RN ரவியின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக CPI அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், RN ரவியின் செயல்பாடுகள் அரசியலமைப்புக்கு எதிரானது; மாநில அரசின் உரையை வாசிக்காமல், சொந்த கருத்துகளை வெளியிட்டு மரபுகளை களங்கப்படுத்துவதாக அக்கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் விமர்சித்துள்ளார். ஏற்கெனவே, <<18768093>>காங்.,<<>> தேநீர் விருந்தை புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.


