News December 29, 2025
மதுரையில் ஜோதிடருக்கு பீர் பாட்டிலால் குத்து

மதுரை திருப்பாலையை சேர்ந்தவர் ஜோதிடர் மணிகண்டன்(35). அதே பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் விளையாடிய போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அதே பகுதியை சேர்ந்த மணிகண்ட பிரபு(24) பீர் பாட்டிலுடன் அவர் வீட்டிற்கு சென்று பாட்டிலை உடைத்து சரமாரியாக அவரை குத்தினார். திருப்பாலை போலீசார் மணிகண்ட பிரபுவை இன்று கைது செய்தனர்.
Similar News
News January 3, 2026
மதுரை: ஆண் குழந்தை இருந்தால் ரூ.3,14,572 ?

மதுரை மக்களே, ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT
News January 3, 2026
மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள் தேதி அறிவிப்பு

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறக்கூடிய அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. அதில் அவனியாபுரத்தில் வரும் 15ஆம் தேதியும்,பாலமேட்டில் 16ஆம் தேதியும், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவித்துள்ளார்.
News January 3, 2026
மதுரை: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

மதுரை மக்களே வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (9445000449, 9445000450, 8870678220) புகாரளியுங்க.மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.


