News December 29, 2025
திருவாரூர்: மனைவி கொடூர கொலை-கணவர் கைது!

வலங்கைமான் அருகேயுள்ள ஆவூரைச்சேர்ந்தவர் பரதன் (31) இவரது மனைவி அழகுசுந்தரி (26) திருமணமாகி 2 வருடமாகிறது. சம்பவத்தன்று இரவு இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பரதன் தோசை திருப்பியால் மனைவியை தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அழகுசுந்தரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்துள்ளார். இதனை அடுத்து வலங்கைமான் போலீசார் பரதனை கைது செய்துள்ளனர்.
Similar News
News January 12, 2026
திருவாரூர்: 10th போதும்-ரூ.78,800 சம்பளத்தில் வேலை!

NCERT தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 176
3. வயது: குறைந்தது 27 – அதிகபட்சம் 50
4. சம்பளம்: ரூ..19,900 – ரூ.78,800
5. கல்வித்தகுதி: 10th, 12th, ITI, Diploma, Any Degree
6. கடைசி தேதி: 16.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News January 12, 2026
திருவாரூர்: பணம் வைத்து சூதாட்டம்-2பேர் கைது

முத்துப்பேட்டை போலீசார் தில்லைவிளாகம் கீழக்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபோது, வாசன் என்பவரின் மீன் குளம் அருகே பணம் வைத்து சூதாட்டம் விளையாடிக் கொண்டிருந்த கீழக்கரை வாசன் (45), இடையார்காடு வீரசேகரன் (47) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய கீழக்கரை ராதாகிருஷ்ணன் மற்றும் செல்லப்பா ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.
News January 12, 2026
திருவாரூர்: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது <


