News May 2, 2024

முன்னாள் எம்எல்ஏ காலமானார்

image

உதகை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ‘மக்கள் நேசன்’ என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவருமான H.M.ராஜூ (92) வயது மூப்பு காரணமாகக் காலமானார், 1989, 1991, 2001 ஆகிய தேர்தல்களில் காங்., கட்சி சார்பில் வெற்றிபெற்று எம்எல்ஏவாக தேர்வான இவர், சட்டமன்றத் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் அளியூர் கிராமத்தில் நடைபெறுகின்றது. அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Similar News

News March 11, 2026

OPS ஆதரவாளர்கள் ஒன்றாக அதிமுகவில் இணைந்தனர்

image

OPS-ன் ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர், நத்தம் விஸ்வநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த OPS-ன் தீவிர ஆதரவாளர்களான ரத்தினம், முத்துச்சாமி, இளங்கோவன் ஆகியோர் தலைமையில் மேலும் பலரை அதிமுகவில் இணைக்க EPS தரப்பு திட்டமிட்டுள்ளது. OPS, திமுகவில் இணைந்ததால், அவரது ஆதரவாளர்கள் பலரும் அடுத்தடுத்து கூண்டோடு அதிமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர்.

News March 11, 2026

காணாம போயிடுவீங்க டிரம்ப்: கடுமையாக எச்சரித்த ஈரான்

image

ஹார்முஸ் வழியாக எண்ணெய் ஏற்றுமதியை தடுத்தால் ஈரானை 20 மடங்கு கடுமையாக தாக்குவோம் என டிரம்ப் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி லாரிஜானி, ’டிரம்பை விட வலிமையானவர்களால் கூட ஈரானை எதுவும் செய்ய முடியவில்லை. கவனமாக பேசுங்கள் டிரம்ப் இல்லையெனில் காணாமல் போவீர்கள்’ என்றும் டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News March 11, 2026

தமிழக தேர்தல் தேதி.. சற்றுமுன் வெளியான தகவல்

image

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து முடித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, 5 மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணையை இறுதி செய்வது தொடர்பாக, டெல்லியில் CEC ஞானேஷ் குமார் இன்று ஆலோசனை செய்கிறார். இதனைத் தொடர்ந்து, 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளை மார்ச் 15-ல் வெளியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!