News December 29, 2025

பெரம்பலூர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <>https://tnuwwb.tn.gov.in<<>>/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News January 4, 2026

பெரம்பலூர்: மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

image

பெரம்பலூர் சி.ஐ.டி.யு அலுவலகத்தில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பெரம்பலூர் வட்ட கிளை செயற்குழு கூட்டம் மாநில செயலாளர் அகஸ்டின் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் கடந்த (ஜன.1)முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்கிட கோரி, வருகின்ற 7-ஆம் தேதி, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News January 4, 2026

பெரம்பலூர்: திருமணத் தடையா? இங்க போங்க!

image

பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான பெருமாளுக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி மனமுருகி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!

News January 4, 2026

பெரம்பலூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு…

image

பெரம்பலூர் மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!