News December 29, 2025

நெல்லை: பேருந்து மோதி சம்பவ இடத்தில் பலி!

image

கங்கைகொண்டான் சிப்காட் அருகே ஆலடிப்பட்டியில் இருந்து 2 பேர் நேற்று பைக்கில் சென்றனர். அப்போது குமரியிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ், பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த ஓட்டப்பிடாரம் முனியசாமி 36 சம்பவ இடத்திலேயே இறந்தார். உடன் சென்ற உலகநாதன் படுகாயம் அடைந்தார். அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கங்கைகொண்டான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News

News January 13, 2026

நெல்லை: செல்போனில் AADHAR கார்டு., ஒரு HI போதும்!

image

நெல்லை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இது வேலை செய்யவில்லை என்றால் இங்கே <>கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்க நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 13, 2026

நெல்லை: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

image

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800-425-3993 அழைக்கவும். இந்த தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 13, 2026

BREAKING: சென்னை டூ நெல்லை இன்று சிறப்பு ரயில்

image

சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.50 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கபடுகின்றன. இதில் 8 ஏசி பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. தாம்பரம் , செங்கல்பட்டு , விழுப்புரம் , விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இந்த சிறப்பு ரயில் நெல்லையை சென்றடைகிறது. SHARE பண்ணுங்க..

error: Content is protected !!