News December 29, 2025
நாகை: பைக் வாங்க அரசு மானியம்!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!\
Similar News
News January 2, 2026
நாகை: பொங்கல் பரிசு… முக்கிய அறிவிப்பு!

தமிழக அரசால் ஆண்டுதோறும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அப்படி உங்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் தரமில்லாமலோ அல்லது சரியாக வந்து சேரவில்லை என்றால் ‘1800 425 5901’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு அலைச்சல் இல்லாமல் உங்களால் புகார் அளிக்க முடியும். மேலும் இந்த எண்ணின் மூலமாக ரேஷன் கடை மற்றும் ரேஷன் பொருட்கள் குறித்தும் நீங்கள் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News January 2, 2026
வேலைவாய்ப்பு: நாகை கலெக்டர் அறிவிப்பு

நாகை மாவட்ட குழந்தைகள் நலன் துறையில் காலியாக உள்ள உதவியாளர், கணினி இயக்குபவர் உள்ளிட்ட ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் www.nagapattinam.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஜன.8-க்குள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 2, 2026
நாகை: குழந்தை இறந்த சோகத்தில் தாய் தற்கொலை

கீழையூா் அடுத்த அகரம் பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் (35)-ரம்யா (30) தம்பதி மகன் தேவா (3). ஐயப்பன் கடந்தாண்டு உயிரிழந்த நிலையில் ரம்யா மகனை வளா்த்து வந்தாா். இந்நிலையில், எதிா்பாராதவிதமாக வீட்டுவாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அருகிலுள்ள வாய்க்காலில் தவறி விழுந்து இறந்துபோனது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த ரம்யா புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.


