News December 29, 2025

குமரியில் கூடுதல் நுழைவுக்கட்டண வசூல்

image

சுற்றுலாதலமான மாத்தூர் தொட்டிப் பாலத்தில் நுழைவுக்கட்டணம், பார்க்கிங் வசூல் கட்டணம் குறித்த அறிவிப்பு பலகைகள் இல்லை. மேலும் நபர் ஒருவருக்கு நுழைவுக்கட்டணம் ஜி.எஸ்.டி யுடன் சேர்த்து ரூ. 5 என அருவிக்கரை ஊராட்சி நிர்வாகம் நிர்ணயித்த நிலையில் ரூ. 5.90 என ஜி. எஸ்.டி. தொகையை கூடுதலாக சேர்த்து ரூ.6 என வசூல் செய்கிறார்கள். தொட்டிப் பாலத்தில் கட்டணம் குறித்த பலகை வைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை.

Similar News

News January 21, 2026

குமரி மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

குடியரசு தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் ஜன.26 அன்று காலை 11மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சிகளில் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்படவுள்ளது என குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று தெரிவித்துள்ளார்.

News January 21, 2026

குமரி: Certificate திரும்ப பெறுவது இனி ரொம்ப ஈஸி..!

image

குமரி மக்களே, உங்களது 10th, 12th , Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <>E-பெட்டகம் என்ற <<>>இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யாலாம். இந்த பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News January 21, 2026

நாகர்கோவில்: கல்லூரி மாணவர் தற்கொலை

image

நாகர்கோவில் பள்ளிகளைப் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (21). கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், சக மாணவர் ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டதால் ஆகாஷ் கல்லூரிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த ஆகாஷ் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷ மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!