News December 29, 2025
BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது

தங்கம் விலை இன்று(டிச.29) 22 கேரட் கிராமுக்கு ₹80 குறைந்து ₹13,020-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ₹640 குறைந்து ₹1,04,160-க்கு விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம், இந்த வாரம் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. <<18699156>>சர்வதேச சந்தையில் தங்கம் விலை<<>> சரிந்து வருவதால் அதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
Similar News
News January 10, 2026
பண மழை கொட்டும் 4 ராசிகள்

ஜன.18-ம் தேதி மகாலட்சுமி ராஜயோகம் உருவாக இருப்பதால், 4 ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொட்டுமாம். *மேஷம்: திடீர் நிதி ஆதாயம் கிடைக்கும். வேலையில் உயரதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். *துலாம்: தங்கம் வாங்குவதற்கு அதிக வாய்ப்பு. பழைய கடன்களை அடைக்கலாம். *மகரம்: நிதி நிலைமை மேம்படும். பணியில் சம்பள உயர்வு கிடைக்கலாம். *விருச்சிகம்: தொட்டதெல்லாம் வெற்றி. வீடு (அ) வாகனம் வாங்க வாய்ப்புகள் உண்டு.
News January 10, 2026
பூமியில் தங்கம் உருவானது எப்படி?

தங்கம் உண்மையில் பூமியில் உருவானது அல்ல. விண்வெளியில் உள்ள பெரிய நட்சத்திரங்கள் வெடிக்கும்போது அதிலிருந்து தங்கம் சிதறியிருக்கின்றன. அந்த தங்க கட்டிகள் விண்கற்கள் மூலமாக பூமியில் வந்து விழுந்ததாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பிறகு, பூமியின் தட்டுகள் நகர்வதாலும், எரிமலை வெடிப்பு போன்ற சம்பவங்கள் நிகழ்வதாலும் பூமியில் புதைந்துள்ள தங்கம் வெளியே வருகிறது. 99% பேருக்கு தெரியாத இந்த விஷயத்தை ஷேர் பண்ணுங்க!
News January 10, 2026
சிகரெட் பிடித்து எதிர்ப்பை தெரிவிக்கும் ஈரான் பெண்கள்

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில், இளம்பெண்கள் ஈரான் உச்ச தலைவர் கமேனியின் புகைப்படத்தை தீயிட்டு, அதில் சிகரெட் பற்றவைக்கும் வீடியோக்கள் SM-ல் பரவி வருகின்றன. உச்ச தலைவர் புகைப்படத்தை எரிப்பதும், பெண்கள் சிகரெட் பிடிப்பதும் தண்டனைக்குரிய குற்றங்களாக கருதப்படும் ஈரானில், இது பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான துணிச்சலான எதிர்ப்பாக பார்க்கப்படுகிறது.


