News December 29, 2025
தி.மலை: முன்விரோதம் காரணமாக வாலிபர் அடித்து கொலை

செங்கம் அருகே கனிகாரன் கொட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ், புதுப்பட்டு சாலையிலுள்ள மதுபான கடையில் தனது நண்பரோடு மது அருந்தியுள்ளார். அப்போது முன்விரோதம் காரணமாக இருவருக்கும் ஏற்பட்ட தகராற்றில் ரமேஷை அவரது நண்பர் அடித்து கொன்றதாக கூறப்படுகிறது. தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி ரமேஷின் நண்பரை விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News February 3, 2026
தி.மலையில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News February 3, 2026
JUST IN: தி.மலை – அழுகிய நிலையில் சடலம் மீட்பு!

திருவண்ணாமலை: செங்கம் அடுத்த சாத்தனூர் வனப்பகுதி அருகே, விவசாய நிலத்தில் உள்ள வேப்பமரத்தில் 70 வயது மூதாட்டி முத்தம்மாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 17ம் தேதி அவர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் இன்று அவரது உடல் அழுகிய நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஆடையை வைத்து அவரது பிள்ளைகள் உறுதிப்படுத்திய நிலையில், சாத்தனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 3, 2026
தி.மலை: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.


