News December 29, 2025
புழல் சிறையில் இன்று வாகனங்கள் ஏலம்

தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை இயக்குநர் அலுவலகத்தில் பயன்படுத்த இயலாமல் கண்டம் செய்யப்பட்ட பைக், கார் ஆகிய 2 வாகனங்கள் 29ம் தேதி இன்று காலை 10 மணியளவில் புழல் மத்திய தண்டனை சிறையில் பொது ஏலம் நடத்தப்பட்ட உள்ளது. ஏலத்தில் கலந்துகொள்ள விரும்புவோர் ரூபாய் 500 செலுத்தி, பெயர்களை பதிவு செய்து கொள்ளவும். ஏலம் முடிந்தவுடன் எடுக்காதவர்களின் தொகை திருப்பி கொடுக்கப்படும்.
Similar News
News January 12, 2026
சென்னையில் 3 பேர் அதிரடி கைது!

கே.கே நகர் பி.டி ராஜன் சாலையில் மசாஜ் சென்டர் இயங்கி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் பழைய குற்றவாளியான வைரமணி, வினோத்குமார், முருகன் ஆகியோர், அந்த மசாஜ் சென்டருக்கு சென்றுள்ளனர். தாங்கள் ரவுடி ராதாவின் ஆட்கள் எனக்கூறி, மசாஜ் சென்டரில் கத்திமுனையில் மாமூல் கேட்டு மிரட்டி சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கே.கே.நகர் போலீசார், மூவரையும் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
News January 12, 2026
மாநகர பேருந்தில் சிங்கார சென்னை அட்டை பெற வசதி

சென்னை மாநகரப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிப்பதற்கான ‘சிங்கார சென்னை’ அல்லது ‘தேசிய பொதுப் போக்குவரத்து’ (NCMC) அட்டையை, இனி பேருந்து நடத்துனர்களிடமே நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக ரூ.100 செலுத்தினால், அதில் ரூ.50 மதிப்பிலான பயணத்தை உடனடியாக மேற்கொள்ள முடியும். மீதமுள்ள தொகையை ஆன்லைன் மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
News January 12, 2026
சென்னை மக்களுக்கு ALERT!

சென்னை மக்களே, பொங்கல் பண்டிக்கைக்கு வெளி ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு அரசுப் பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
4. இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!


