News December 29, 2025
முதல்வரின் கோவை பயணம் விவரம் வெளியீடு!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 10.05 மணியளவில் சென்னையிலிருந்து விமானம் மூலமாக கோவை வருகிறார். 11.15 மணியளவில் கோவை விமான நிலையம் வந்து அங்கிருந்து தனியார் ஹோட்டலுக்கு செல்கிறார். பின்னர், அங்கிருந்து 4.30 மணியளவில் புறப்பட்டு திருப்பூர் மாவட்டம் பல்லடம் மகளிரணி மாநாட்டிற்கு சென்று விட்டு பின்னர் மீண்டும் இரவு 8.30 மணியளவில் கோவை விமான நிலையம் வந்து அங்கிருந்து சென்னை செல்கிறார்.
Similar News
News January 8, 2026
பொங்கல் பரிசு: கோவை கலெக்டர் அறிவிப்பு

பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3000 ரொக்கப்பணம் வழங்கும் நிகழ்வை இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைக்க உள்ளார். அதனை தொடர்ந்து கோவையில் வடகோவை சிந்தாமணி கூட்டுறவு அங்காடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கோவை கலெக்டர் பவன்குமார், எம்.பி கணபதி ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் துவக்கி வைக்க உள்ளதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.
News January 8, 2026
கோவை அருகே கோர விபத்து! உடல் கருகி பலி

கோவை, திருமலையாம் பாளையம் அருகே இரும்பு குழாயில் கார் மோதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் காரை ஓட்டி வந்த ஆகாஷ், முரளி ஆகிய 2 பேர் உயிர் தப்பிய நிலையில், காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த விமல்ராஜ் தீயில் கருகி உயிரிழந்தார். மூவரும் தனியார் கார் ஷோரூம் வேலை பார்த்து வரும் நிலையில், பணி முடிந்து திரும்பும் போது இவ்விபத்து நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News January 8, 2026
அமித்ஷா வருகை CM-யை பாதித்துள்ளது: வானதிசீனிவாசன்

கோவை தெற்கு எம்எல்ஏ வானதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அமித்ஷா வருகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாதித்துள்ளது என்று நினைக்கிறேன். இதற்கே இப்படி என்றால் அடுத்த முறை அமித்ஷா தமிழ்நாடு வரும்போது அதிமுக – பாஜக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும். அப்படி அமையும் கூட்டணி வரும் தேர்தலில் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும். அதனால்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு விழாவிலும் அரசியல் பேசி புலம்புகிறார்.


