News December 29, 2025

நெல்லை: தொழிலாளி கொலையில் 3 சிறுவர்கள் கைது!

image

நெல்லை மாவட்டம் வி கே புரம் அருகே காக்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த மைக் செட் உரிமையாளர் மாரியப்பன் (47). இவர் நேற்று முன்தினம் இரவு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அதே ஊரைச் சேர்ந்த அருண்பாண்டி (19) மற்றும் 3 இளம் சிறார்களை விக்கிரமசிங்கபுரம் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். ஏற்கனவே இருந்த தகராறில் முன்விராதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Similar News

News January 10, 2026

நெல்லை : ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

image

நெல்லை மக்களே, மகளிர் உரிமை தொகை ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்<>கு க்ளிக் <<>>செய்து பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆவணங்களை பதிவேற்றம் செய்து புகார் அளியுங்க. 30 நாளில் தீர்வு கிடைக்கும். இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News January 10, 2026

நெல்லை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

திருநெல்வேலி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ ON செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT.!

News January 10, 2026

நெல்லை: மாணவி கழுத்தை நெரித்து கொலை

image

நெல்லை வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (52). இவரது மகள் வர்ஷினி (22) சேலம் தனியார் சித்த மருத்துவ கல்லூரியில் பயின்று வந்தார். இவர் கடந்த ஜன.7ம் தேதி தான், தங்கியிருந்த வீட்டில் கழுத்து நெரித்து கொலை செய்ப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொள்கையில் வர்ஷினியின் தந்தை தலைமறைவானது தெரிந்தது. இதனால், அவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!