News December 29, 2025

செங்கை: சொந்த மகனையே துடிதுடிக்க கொன்ற தந்தை!

image

செங்கல்பட்டு, பெருந்தண்டலம் பகுதியில் வசித்து வந்த வெஸ்லிக்கு போதை பழக்கம் இருந்துள்ளது. அவருக்கு பெண் பார்த்து நிச்சயம் செய்திருந்த நிலையில் வெஸ்லி போதைப்பொருள் பயன்படுத்துவைத்தை அறிந்த பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த வெஸ்லி வீட்டிற்கு வந்து சண்டை போட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த வெஸ்லி தந்தை இரும்பு கம்பியால் வெஸ்லியை துடிக்க துடிக்க கொன்றுள்ளார்.

Similar News

News January 15, 2026

செங்கை: பொங்கலுக்கு பொருட்கள் வாங்குவோர் கவனத்திற்கு…

image

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். வாங்கிய பொருட்களை கடை உரிமையாளர் மாற்றி தரவோ, பணத்தை திருப்பி தரவோ மறுத்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். 15 நாட்களுக்குள் சேதமின்றி இருந்தால் மாற்றம் அல்லது பணம் திரும்ப வழங்க வேண்டும். விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 044-28589055ல் தொடர்பு கொள்ளலாம்.

News January 15, 2026

செங்கல்பட்டு: 10th போதும்.. மத்திய அரசு வேலை ரெடி!

image

1. RBI-ல் Office Attendant பிரிவில் 572 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. இதற்கு 10th முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.47,029 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்.04. சூப்பர் வாய்ப்பு. மிஸ் பண்ண வேண்டாம். நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News January 15, 2026

தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

image

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள் வசதிக்காக வரும் ஜன.18-ந்தேதி நெல்லை – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நெல்லையில் இருந்து மதியம் 1:00 மணிக்கு புறப்படும் ரயில் ராஜபாளையம் வழியாக மறுநாள் அதிகாலை 3:00 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!