News December 29, 2025
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!

மயிலாடுதுறை மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் திருவெண்காடு அரசு சமூக நீதி பள்ளி மாணவிகள் விடுதி, கல்லூரி மாணவிகள் விடுதியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 50 மாணவிகளுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் மாவட்டத்தில் இயங்கி வரும் கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் உரிய சான்றுகளுடன் வருகிற 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்
Similar News
News January 17, 2026
மயிலாடுதுறை: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு நாகை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
News January 17, 2026
மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட மக்கள், ‘பகுதி நேர வேலை வாய்ப்பு’ என உங்களது அலைபேசிக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதன் மூலம் உங்களிடமிருந்து பணம் பறிக்க வாய்ப்புள்ளதாகவும், இதுபோன்ற சைபர் குற்றங்களை நீங்கள் எதிர்கொண்டால் உடனடியாக ‘1930’ என்ற எண்ணில் புகார் அளிக்க மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
News January 17, 2026
மயிலாடுதுறை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.16) இரவு 10 முதல் இன்று (ஜன.17) காலை 8 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


