News December 29, 2025

நாமக்கல் அருகே சோகம்: தம்பதி விபரீத முடிவு!

image

நல்லுார் அருகே கள்ளிபாளையத்தை சேர்ந்த தம்பதி பச்சமுத்து(85), தங்கம்மாள்(82). இவர்கள் தோட்டத்தில் வசித்து வந்தனர். இவர்களது மகன் வெற்றிவேல், சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். மகன் இறப்புக்கு பின், உறவினர்கள் யாரும் இவர்களை பராமரிக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து இறந்து கிடப்பது தெரியவந்தது. நல்லார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 13, 2026

நாமக்கல்: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

image

அல்லாள இளைய நாயக்கர் அரசு விழா வரும் 15-ல் நடைபெற உள்ளது. இதனையொட்டி ஜேடர்பாளையம், வேலூர் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட அரசின் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட நாளில் 10 அரசின் மதுபான சில்லறை விற்பனை கடைகளை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News January 13, 2026

நாமக்கல்: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

image

நாமக்கல் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <>இங்கு கிளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும். 2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும். 3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம். இதை மற்றவர்களும் பயனடைய SHARE பண்ணுங்க!

News January 13, 2026

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

image

நாமக்கல்லில் நாளை ( ஜனவரி.14) புதன் இரவு 07:45-க்கு பெங்களூரு, ஹூப்ளி, மும்பை, சூரத், அகமதாபாத், ஜோத்பூர், பிகானீர் வழியாக இயக்கப்படும் 22497/22498 ஶ்ரீ கங்காநகர் – திருச்சி – ஶ்ரீ கங்காநகர் ஹம்சாஃபர் ரயில் நாமக்கல் வழியாக செல்ல உள்ளது. ஆகையால், ரயில் பயணிகள் இதனை பயன்படுத்தக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!