News May 2, 2024
புதுவையில் குரு பெயர்ச்சி விழா

புதுவை பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், குரு பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. இதையொட்டி, நவகிரக சன்னிதியில் உள்ள குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பஞ்சமூர்த்திகளுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைந்த நேரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News January 19, 2026
புதுச்சேரி: புதிய பேருந்து நிலையத்தில் கடைகள் ஏலம்

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில், புதிதாகக் கட்டப்பட்டுள்ள உணவகம் மற்றும் 34 கடைகளை வாடகைக்கு விடுவதற்கான மின்னணு ஏல (e-Auction) அறிவிப்பை, நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 34 வணிகக் கடைகள் ஏலத்திற்கு வருகின்றன. மேலும் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிப்படுத்தும் வகையில், இந்த ஏலம் மின்னணு முறையில் (Online) நடைபெறும் என புதுச்சேரி நாகரட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
News January 19, 2026
புதுவை: பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

புதுவை, வில்லியனூர் SI திருமுருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது கோபாலன் கடை பகுதியில், ஒருவர் பொது மக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மர்ம நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த சரண்ராஜ் (25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சரண் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.