News December 29, 2025
தி.மலை: குளத்தில் மூழ்கி 9ஆம் வகுப்பு மாணவன் பலி!

வெம்பாக்கம் அருகே அரியூர் கிராமத்தைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவன் லிங்கேஷ் (14), ஆற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் தேடிச் சென்ற பெற்றோர், ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கியிருந்த லிங்கேஷை மீட்டனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து பிரம்மதேசம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 13, 2026
தி.மலை: பொங்கல் பணம் ரூ.3,000 வரலையா?

உங்களுக்கு இன்னும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வரலையா? பரிசு தொகுப்பு வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என தெரிவித்தாலோ, தரமாக இல்லையென்றாலோ 1967 என்ற எண்ணில் நீங்கள் புகாரளிக்கலாம். மேலும், பரிசு வாங்க ரேஷன் கடை திறந்திருக்கா எனத் தெரிந்துகொள்ள PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது பற்றி நீங்கள் மெசேஜ் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஷேர்!
News January 13, 2026
தி.மலை: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

தி.மலை மக்களே, பொங்கல் விடுமுறையின் போது சொந்த ஊருக்கு செல்ல பேருந்து கிடைப்பது என்பது குதிரைக்கொம்பாக உள்ளது. இதுபோன்ற சமயத்தில் ஆம்னி பேருந்துகள் அதிகளவு கட்டணத்தை உயர்த்தி மக்களிடம் கொள்ளையடிக்கின்றன. இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தி.மலையில் உள்ளவர்களுக்கோ (அ) உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 9677398825 எண்ணில் புகார் செய்யலாம். ஷேர்!
News January 13, 2026
தி.மலை: விபத்தில் வாலிபர்கள் பலி!

தி.மலை, மொடையூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் விஜய் (25) மற்றும் விக்னேஷ் (16) நண்பர்களான இருவரும் மட்டபிறையூரிலிருந்து மொடையூர் கிராமத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போளூர் போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


