News December 29, 2025

திருப்பத்தூர்: இளம் பெண்களுக்கு நேர்ந்த சோகம்!

image

நாட்றம்பள்ளி அருகே புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த கோகிலா (18), சுபஸ்ரீ (22) இருவரும் நேற்று (டிச.28) மாலை பாலாற்றில் குளிக்க சென்றனர். அப்போது ஆற்றிலிருந்த பள்ளத்தில் மூழ்கி தவித்தனர். இருவரையும் குடும்பத்தினர் சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News

News January 19, 2026

அறிவித்தார் திருப்பத்தூர் கலெக்டர்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வருகின்ற ஜனவரி 26, குடியரசு தின விழாவை முன்னிட்டு அனைத்து ஊராட்சி கிராம சபை கூட்டம் நடத்திடவும் வரவு செலவு கணக்குகள் பொதுமக்கள் அறியும்படி வைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பல்வேறு துறைச் சார்ந்த அலுவலர் கலந்து கொள்ளவும் கண்காணிக்க நியமன அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் ரிவித்துள்ளார்

News January 18, 2026

திருப்பத்தூர்: திருமண தடை நீங்க அற்புத கோயில்

image

திருப்பத்தூர் மாவட்டம் மடவாளம் பகுதியில் அமைந்துள்ளது 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்கநாதேஸ்வரர் கோயில். அங்கம் பிளவு பட்டு இருப்பதால் அங்க நாதேஸ்வரர் என்ற பெயர் சொல்லி அழைக்கின்றனர். இந்த கோயிலில் அம்மன் சுபத்ரா ஜனனி என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். இங்கு வந்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். திருமண தடையுள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 18, 2026

திருப்பத்தூர்: 12th, diploma, ITI முடித்தவரா நீங்கள்?

image

மத்திய அரசின் இந்திய அணுசக்தி நிறுவனத்தில் டெக்னீஷியன், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 114 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12th, டிப்ளமோ, ஐடிஐ படித்த 18-28 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.34,286-ரூ.55,932 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில் <<>>வரும் பிப்.04க்குள் விண்ணப்பிக்கலாம். 12th முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!