News December 29, 2025

காஞ்சிபுரம் போலீஸ் அதிரடி நடவடிக்கை!

image

வாலாஜாபாத் அடுத்த ஆசிரியர் நகரில், வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது சம்பந்தமாக, வழக்கு பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு கிராமத்தைச் சேர்ந்த கோபி என்பவரை வாலாஜாபாத் போலீசார் நேற்று(டிச.28) கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 20.662 கிலோ குட்கா பொருள் 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.

Similar News

News January 14, 2026

காஞ்சிபுரம்: ரயில்வேயில் 312 காலியிடங்கள்! APPLY NOW

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 312 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க ஜன.29ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 14, 2026

காஞ்சிபுரத்தில் கேஸ் பிரச்னையா..?

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமையல் எரிவாயு நுகர்வோர் சந்திக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், வரும் ஜனவரி 26ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சிலிண்டர் முன்பதிவு, விநியோக தாமதம் மற்றும் கூடுதல் கட்டணம் குறித்த புகார்களை பொதுமக்கள் நேரில் தெரிவித்துத் தீர்வு பெறலாம்.

News January 14, 2026

காஞ்சிபுரம் கலெக்டர் அறிவித்தார்!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். காஞ்சிபுரம் தாசில்தார் இருங்காட்டுக்கோட்டை நில எடுப்பு பிரிவு தனித் தாசில்தாராகவும், பரந்தூர் விமான நிலைய தாசில்தார் நிலை எடுப்பு பிரிவு நடராஜன், உத்திரமேரூர் வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!