News December 29, 2025
மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் பரபரப்பு!

கரூர் மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி பகுதியைச் சேர்ந்த 30வயதுடைய பெண் மருத்துவர் பணியாற்றி வருகிறார். இவரை அங்கு சமையல் வேலை செய்யும் விஜயகுமார் என்பவர் தகாத வார்த்தைகளால் திட்டி, அனுமதியின்றி புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், சிந்தாமணிப்பட்டி போலீசார் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 13, 2026
கரூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
News January 13, 2026
கரூரில் களைகட்ட போகும் ஜல்லிக்கட்டு!

கரூர் ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு போட்டிக்கு, நாளை முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். வரும், 17ல் பொங்கல் பண்டி-கையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இதில், மாடுபிடி வீரர்கள் மற்றும் பங்கேற்கும் காளைகளுக்கான பதிவுகளை karur.nic.in என்ற இணையதளம் மூலம் நாளை காலை 8:00 மணி முதல் 16ம் தேதி காலை 8:00 மணி வரை இணையவழி பதிவுகள் மேற்கொள்ளலாம் என அறிவிப்பு!
News January 13, 2026
உஷார்..கரூரில் இங்கெல்லாம் மின்தடை!

கரூரில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று(ஜன.13) மின் பராமரிப்பு பணி காரணமாக சின்னப்பனையூர், ஆலத்துார்,களத்துப்பட்டி,செம்மேடு,ரெங்காச்சிபட்டி,பாரதி நகர்,புரசம்பட்டி, இந்திரா நகர், வீராச்சிபட்டி, பனையூர், நெய்தலுார் காலனி சேப்ளாப்பட்டி, கட்டாணிமேடு,நெய்தலுார்,ராமாயி பனையூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.


