News December 29, 2025

தங்கம் விலை மளமளவென குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

image

ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த தங்கம் விலை சர்வதேச சந்தையில் திடீரென இறங்குமுகம் கண்டு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதன்படி, தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) $42(இந்திய மதிப்பில் ₹3,772) குறைந்து $4,441-க்கு விற்பனையாகிறது. இதனால், இந்திய சந்தையில் இன்று தங்கம் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News January 1, 2026

ஆண்டின் முதல் சூரிய உதயத்தை யார் பார்த்தீங்க?

image

புது வருஷம் தொடங்கியாச்சு. நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்க பலரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருப்பீர்கள். பீச், ஹோட்டல் என பல இடங்களிலும் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்று கொண்டாடித் தீர்த்திருப்பீர்கள். ஆனால், தொடங்கிய புத்தாண்டின் முதல் நாளை நமக்கு கொடுத்துள்ள முதல் சூரிய உதயத்தை யாரெல்லாம் கண்டு களித்தீர்கள் என கமெண்ட் பண்ணுங்க. இதுவும் ஒரு புது வரவேற்பு தானே!

News January 1, 2026

விசிகவில் 48 மா.செ.,க்களை நீக்கிய திருமாவளவன்!

image

விசிகவில் 48 மா.செ.,க்கள் நீக்கப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் 144 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் மண்டல பொறுப்பாளர்களாகவும், 48 பேர் நீக்கம் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். வரும் ஜூலையுடன் 96 மா.செ.,க்களின் பதவிக்காலம் நிறைவடைவதால், அதன் பின் நியமன முறையில் இல்லாமல் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News January 1, 2026

விஜய் ஒரு கிறிஸ்தவ வெறியர்: H.ராஜா

image

விஜய் ஒரு கிறிஸ்தவர் மட்டுமல்ல, கிறிஸ்தவ வெறியர் என H.ராஜா சாடியுள்ளார். இதை மட்டுமே வைத்து கிறிஸ்தவ வாக்குகளை விஜய்யால் பிரிக்க முடியாது என்ற அவர், ராகுல், பிரியங்கா கூட கிறிஸ்தவ வேடம் போட்டு பார்த்தார்கள்; ஆனால் குமரியை தாண்டி அவர்கள் ‘பாச்சா’ பலிக்கவில்லை என விமர்சித்துள்ளார். மேலும், கிறிஸ்தவர்கள் வாக்குகள் மட்டுமே தேர்தல் வெற்றிக்கு போதாது எனவும் அதை விஜய் உணர்வார் என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!