News December 29, 2025
குன்னூர் அருகே விபத்து

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை குன்னூரில் இருந்து ஐந்தாவது கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா வாகனம் ஒன்று கொண்டை ஊசி வளைவில் திருப்பும்போது வலது புறமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து வாகன காவல் துறையினர் காயமடைந்தோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் விபத்து காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் ஏற்பட்டது.
Similar News
News January 13, 2026
கூடலூர் பெண்ணுக்கு ஜனாதிபதி அழைப்பு

கூடலூர் பகுதியைச் சேர்ந்த தேயிலை தோட்டக் கூலி தொழிலாளி இந்திராணிக்கு (56), டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்திய ஜனாதிபதியிடமிருந்து நேரடி அழைப்பு வந்துள்ளது. இதுகுறித்து அப்பெண் கூறுகையில், சாதாரணக் கூலித் தொழிலாளியான எனக்கு கிடைத்துள்ள இந்த அழைப்பு மிகுந்த ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது என்றார்.
News January 13, 2026
நீலகிரி: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
News January 13, 2026
குன்னூரில் வெளுத்த மழை

குன்னூர் டானிங்டன் பிரிட்ஜ் சாலை, அம்பேத்கர் நகர் பகுதியில் நேற்று பெய்த மழையால் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இந்த மரம் அங்குள்ள வீட்டின் மதில் சுவர், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது விழுந்தது. இதில் கார்கள் பலத்த சேதமடைந்தன. மேலும், அப்பகுதியில் விபத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.


