News December 29, 2025
ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
Similar News
News January 9, 2026
ஈரோடு அருகே இளைஞர் சம்பவயிடத்திலே பலி

ஈரோடு, எல்லப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் சாயத் தொழிற்சாலையில் பவானியைச் சேர்ந்த தமிழ்வாணன் என்பவர் வர்ணம் பூசும் பணியில் இருந்தார். சிமெண்ட் அட்டையின் மீது நின்று வர்ணம் பூசி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து நிகழ்வு இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 9, 2026
ஈரோடு: குழந்தை திடீர் பலி

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு அருள்மொழி (1½) என்ற ஆண் குழந்தை உள்ளது. இக்குழந்தைக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதனால் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தையை பெற்றோர் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை உயிரிழந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 9, 2026
ஈரோடு தூக்கிட்டு பெண் தற்கொலை

ஈரோடு முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியம் ஏழாவது பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி நாகம்மாள் (46). இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. இதனால் மன வேதனையுடன் காணப்பட்ட நாகம்மாள் வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ஈரோடு தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


