News December 29, 2025
கடலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று (டிச.28) இரவு 10 முதல் இன்று (டிச.29) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Similar News
News January 7, 2026
கடலூர்: மணல் லாரி மரத்தில் மோதி விபத்து

காட்டுமன்னார்கோவில் அடுத்த வடக்கு கொளக்குடியை சேர்ந்தவர் ராஜி (42). இவர் நேற்று இரவு பெரம்பலூரில் இருந்து எம்சாண்ட் மணலை லாரியில் ஏற்றிக்கொண்டு குமராட்சி அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் நின்ற புளிய மரத்தில் மோதி நின்றது. இதில் காயமடைந்த ராஜி, காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து குமராட்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News January 7, 2026
கடலூர்: பஸ் ஸ்டாண்டில் கிடந்த பிணம்..

திட்டக்குடி பஸ் நிலையத்தில் நேற்று 75 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக கிடந்துள்ளார். உடனே திட்டக்குடி போலீசார் இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரித்தனர். அதில், இறந்தவர் பெரம்பலூர் மாவட்டம், சின்னவெண்மணியை சேர்ந்த கொளஞ்சி (75) என்பதும், கடந்த 5 மாதங்களுக்கு முன் அவர் வீட்டைவிட்டு வெளியே வந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து இதுகுறித்து திட்டக்குடி போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
News January 7, 2026
கடலூர்: பாதி வழியில் பழுதாகி நின்ற ரயில்!

சென்னை எக்மோரில் இருந்து கன்னியாகுமரிக்கு தினசரி செல்லும் கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று இரவு 8:40 மணிக்கு விருத்தாசலம் ஜங்ஷனுக்கு வந்தபோது, ரயிலின் பின்புறம் உள்ள பொது பெட்டியில் பிரேக் பழுதாகி இருந்ததை, லோகோ பைலட் கண்டு பிடித்தனர். பின்னர் ரயில்வே ஊழியர்கள் பழுதான பிரேக்கை சரி செய்ததும், சுமார் 1.5 மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.


