News December 29, 2025
காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலிசார் விவரம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.29) காலை வரை ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 2, 2026
காஞ்சிபுரம் சரக டிஐஜி பொறுப்பேற்பு!

காஞ்சிபுரம் சரக டிஐஜி கீழ் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களை ஒருங்கிணைந்த காவல் துறை சரக துணை தலைவர் பணியாற்றி வந்த தேவராணி பணி மாறுதல் வழங்கப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் சரக டிஐஜி யாக சஷாங்சாய் இன்று மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் உள்ளே உள்ள டிஐஜி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
News January 2, 2026
காஞ்சிபுரம்: இளைஞர் துடிதுடித்து பலி!

திருவள்ளூர் மாவட்டம் பண்ணூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஸ்துராஜ். இவரது மகன் அஜித் சாமு(2$) நேற்று முன் தினம் இரவு சுங்குவார்சத்திர அடுத்த மொளச்சூர் பைக்கில் சென்றபோது நிலை தடுமாறி தடுப்புச்சுவரில் மோதி படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News January 2, 2026
காஞ்சிபுரம் கலெக்டர் அறிவித்தார்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை(ஜன.3) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.


